கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்தவேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 120 கிராம பஞ்சாயத்துக்களில் 2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் நாளை (வியாழக்கிழமை) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
வண்டல் மண்
இந்த முகாமில் குளத்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுதல், விவசாயத்தில் தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து விளக்குதல், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், பயிர்க்கடன் வழங்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு குறித்து விளக்குதல், கால்நடைகள் நலம் பேண சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களில் பயனாளிகள் தேர்வு செய்தல் என பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.