அனைவரும் முன்னெச்சரிக்கையுடன்செயல்பட வேண்டும்


அனைவரும் முன்னெச்சரிக்கையுடன்செயல்பட வேண்டும்
x

அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

தஞ்சாவூர்

இந்தியாவில் காலநிலை மாற்றத்தை தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தமிழக வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.

கடல் நீர்மட்டம் உயர்வு

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி பெண்கள் கல்லூரியில் புவியியல் துறை சார்பில் காலநிலை மாற்றம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நான் பல இடங்களில் பேசி வருகிறேன். தற்போது இந்தியாவிலும் காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. புவியின் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. காலப்போக்கில் புவி வெப்பமயமாதல் மேலும் அதிகரித்து இந்திய நாடு மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை பேரழிவுகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

எனவே நமது வருங்கால இளைஞர்கள் இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை தடுக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம்.

பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

இதனை நாம் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். மேலும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளில் இருந்து நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை பேராசிரியைகள் ராதா, வெங்கடலட்சுமி ஆகியோர் பேசினர். இதில் புவியியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். முன்னதாக புவியியல் துறை பேராசிரியை அனுசியா வரவேற்றார். முடிவில் துணை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story