4 வழிச்சாலை பணி தாமதமாவதாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
வாக்குவாதம்
கவுந்தப்பாடியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பணியில் ஈடுபட்டு இருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று சந்தித்து பணிகள் மெதுவாக நடப்பதாக குற்றம் சாட்டினார்கள்.
மேலும் கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவிலிருந்து இருந்து கிருஷ்ணாபுரம் காஞ்சிக்கோவில் பிரிவு வரை உடனடியாக பணியை முடிக்கவேண்டும்.
சாக்கடைகளின் உயரத்தை குறைக்கவேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றக்கோரி நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கவுந்தப்பாடி பகுதியில் கடையடைப்பு நடத்தப்படும் என்று கூறி சென்றார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.