வனக்குழு தலைவர் தேர்ந்தெடுப்பதில் சதி நடப்பதாக குற்றச்சாட்டு வன அலுவலகம் முன்பு பொதுமக்கள திரண்டதால் பரபரப்பு


வனக்குழு தலைவர் தேர்ந்தெடுப்பதில் சதி நடப்பதாக  குற்றச்சாட்டு வன அலுவலகம் முன்பு பொதுமக்கள திரண்டதால் பரபரப்பு
x

செங்கம் அருகே வனக்குழு தலைவர் தேர்ந்தெடுப்பதில் சதி நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறி மாவட்ட வன அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை


செங்கம் அருகே வனக்குழு தலைவர் தேர்ந்தெடுப்பதில் சதி நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறி மாவட்ட வன அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வளர்ச்சி பணிகள்

செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஊராட்சி வீரனந்தல் அடுத்த சாமாலை கிராமத்தில் இருளர் மற்றும் வேட்டைக்காரன் சமூகத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தை வனத்துறை தத்தெடுத்து சாலை வசதி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் விவசாய வேலைகளை செய்து வருகின்றனர்.

மேலும் வனத்துறையினரும் செடி நடுதல், வன பராமரிப்பு போன்ற பணிகளுக்கு கூலியின் அடிப்படையில் அழைத்து சென்று வந்துள்ளனர். அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை வனத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அப்பகுதி மக்களால் 12 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதே கிராமத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். தற்போது வனத்துறையில் பணியாற்றுபவர்கள் சிலரின் மூலம் சாமாலை கிராமத்திற்கு தொடர்பு இல்லாத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

வன அலுவலகம் முன்பு திரண்டனர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலகம் முன்பாக திரண்டனர். அவர்களிடம் மாவட்ட வனத்துறை அலுவலர் அருண்லால் தலைமையிலான வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழைய தலைவரையே தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும், தலைவரை தேர்ந்தெடுப்பதில் சதி நடப்பதாக கூறினர்.

இதையடுத்து வனத்துறையினர் தேர்தல் நடத்தி அதன் மூலம் வனக்குழு தலைவரை நியமனம் செய்யுங்கள் என்று கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story