காலி இடங்களில் மருத்துவமனை, கல்லூரிகள் ஏற்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்-மத்திய மந்திரியிடம், நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை


காலி இடங்களில் மருத்துவமனை, கல்லூரிகள் ஏற்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்-மத்திய மந்திரியிடம், நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2022 12:14 AM IST (Updated: 1 Jun 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

காலி இடங்களில் மருத்துவமனை, கல்லூரிகள் ஏற்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம், நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார்

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி., மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தர் அபாஸ் நக்வியிடம் அளித்த மனுவில், தமிழ்நாட்டில் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்கள் பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டும் பயனற்று இருக்கிறது. தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் உறுப்பினராக நேரடியாக பல்வேறு இடங்களை ஆய்வும் செய்து இருக்கிறோம். ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட சொத்துக்களை மீட்பது மட்டுமல்லாது, இருக்கும் சொத்துக்களை ஆக்கிரமிக்கப்படாமல் தடுப்பதற்கும், அதனை மக்களுக்கு பயன்படும் வண்ணம் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். எனவே அங்கு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்த நடைமுறைகளை எளிதாக்கி சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை முறையாக வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story