மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு


மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறுவை தொகுப்பு திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மானியவிலையில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவு செய்யலாம் என கலெக்டர் மகாபாரதி ெதரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

குறுவை தொகுப்பு திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மானியவிலையில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவு செய்யலாம் என கலெக்டர் மகாபாரதி ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை தொகுப்பு திட்டம்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவித மானியத்தில் ரூ.75.95 கோடி அளவில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் 55 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.13.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் வழங்க ரூ.1 கோடியும், 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வழங்க ரூ..8 லட்சமும், குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடி செய்ய ரூ.8.5 லட்சமும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் ரூ.14.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் எந்திரங்கள் 50 சதவீத மானியத்தில் 94 விசை உழுவை எந்திரங்கள் வழங்க ரூ.8 கோடியும் என மொத்தம் ரூ.15.55 கோடி குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய 5 வட்டாரங்களுக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி இலக்காக 96 ஆயிரம் ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 55 ஆயிரம் ஏக்கருக்கு குறுவை சிறப்பு தொகுப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ,பி. உரம் மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

உழவன் செயலி

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். விவசாயிகள் ஏதேனும் ஒரு இனத்தில் மட்டுமே பயன்பெற முடியும்.

எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து குறுவை தொகுப்பு திட்ட பயன்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story