வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு


வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
x

அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா, அலுவலக மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் 15-வது நிதிக்குழுவில் இருந்தும், பொது நிதியிலிருந்தும் தலா ஒரு கவுன்சிலருக்கு 8.40 லட்சம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு அறிவித்தார். அதன்படி 26 கவுன்சிலர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அங்கன்வாடி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 11 மணிக்கு வருவதாகவும், மீண்டும் 12 மணிக்கு வீட்டுக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. காலை 8 மணிக்கு அங்கன்வாடி மையங்களைத் திறந்து வாரத்திற்கு மூன்று முட்டைகள் கண்டிப்பாக வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அங்கன்வாடி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 15-வது நிதி குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3.40 லட்சத்தை ஒன்றிய கவுன்சிலர்கள் கழிப்பறை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.


Next Story