பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி ஒதுக்கீடு
பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்்டர் மகாபாரதி கூறினார்.
பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்்டர் மகாபாரதி கூறினார்.
சுற்றுலா தலம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சுற்றுலா துறை வளர்ச்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி பேசினார். அப்போது கூறுகையில், பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.23.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சிலப்பதிகார கலைக்கூடம் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. தரங்கம்பாடி சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.4.17 கோடி மதிப்பீட்டிலும், கொடியம்பாளையம் சுற்றுலா பகுதியை மேம்படுத்துவதற்கு ரூ.5.50 கோடி மதிப்பீட்டிலும் திட்ட கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நடவடிக்கை
மேலும், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கு அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு வகையான விளம்பரப்படுத்தல் நடவடிக்கையில் சுற்றுலாத்துறை மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் ஈடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் தினேஷ், முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, பூம்புகார் ஊராட்சி தலைவர் சசிகுமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.