கட்டிட பணிக்கு ரூ.71¾ லட்சம் ஒதுக்கீடு


கட்டிட பணிக்கு ரூ.71¾ லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் யூனியன் கூட்டத்தில் பள்ளி, அங்கன்வாடி கட்டிட பணிக்கு ரூ.71¾ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவி காவேரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கண்ணன், மேலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், யூனியன் தொடக்கப்பள்ளிகளில் பழுதடைந்த 10 பள்ளி கட்டிடங்ககளை முதற்கட்டமாக பழுது நீக்குவதற்கு ரூ.32 லட்சத்து 76 ஆயிரம், பழுதடைந்துள்ள 18 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுது நீக்குவதற்கு ரூ.39 லட்சம் என மொத்தம் ரூ.71 லட்சத்து 76 ஆயிரம் ஒன்றிய பொது நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.

பின்னர் யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் முருகேசன் பேசும்போது, குறும்பலாப்பேரி கோவில் மைதானத்தில் தற்போது பெய்த மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.

யூனியன் தலைவி காவேரி கூறும்போது, இது தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டும் பஞ்சாயத்து மூலம் கொசு மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

கவுன்சிலர் சரவணன் பேசும்போது, பூலாங்குளம் பஞ்சாயத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு ஆணையாளர் கண்ணன் கூறும்போது, இதற்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பல கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.


Next Story