பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு
வீட்டு வசதி வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர்
வேலூர் வீட்டு வசதி வாரியத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் விற்பனைக்கு உள்ள 864 மனைகள், 73 வீடுகள், 38 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி வேலூரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டங்களில் சுமார் 3,800 பயனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சுமார் 2,700 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு குலுக்கல் முறையில் மனை, வீடுகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story