தொப்பூர் அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு


தொப்பூர் அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 6 Jun 2023 11:15 AM IST (Updated: 6 Jun 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

தர்மபுரி

தொப்பூர் அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் தொப்பூர் அருகே உள்ள காணிகரஅள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இந்த பகுதி மக்களுக்கு மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்போது பணிகள் நடக்கிறது. இதை சிலர் தடுக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி மயான பாதை மற்றும் மயானத்திற்கு நிரந்தரமாக நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மகளிர் கழிப்பிட வளாகம்

சிந்தல்பாடியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் கட்டி முடித்து இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் புதர் மண்டிய நிலையில் உள்ள மகளிர் கழிப்பிட வளாகத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story