ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி:ஸ்டெர்லைட் நிர்வாகம் வரவேற்பு
ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி வழங்கியதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து, குழு அமைத்து உள்ளது. இதனை தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் வரவேற்று உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலையில் சில பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவுகளை வழங்கி உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன்மூலம் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த சில மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக தமிழக அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தூத்துக்குடி மற்றும் இந்திய மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய சரியான ஆதரவு மற்றும் முடிவு கிடைக்கும் என நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்து உள்ளோம். முழுமையாக நம்புகிறோம்' என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story