மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க உதவித்தொகை
ஆரணியை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்
ஆரணி டவுன் கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தரணிகுமார். இவரும், அவரது மனைவி இருவரும் மாற்றுத் திறனாளிகள். இவர்கள் பெட்டிக்கடை வைக்க உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து முகாம் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை தரணிகுமாரிடம் வழங்கினார்.
மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது பணிபுாிந்த இலங்கை அகதிகள் தனிதாசில்தார் பார்த்தசாரதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்திற்கான ஆணையினை அவருடைய மனைவி முனிலட்சுமியிடம் கலெக்டர் வழங்கினார்.
மேலும் திருவண்ணாமலை தாலுகா கருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகள் மோகனா சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் உயர் கல்வியினை தொடர கல்வி உதவித்தொகை கோரியிருந்தார்.
மோகனாவின் தந்தை முனுசாமி மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாலும், அவரது தாய் ராஜேஸ்வரி கூலி வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருவதாலும் மோகனாவிற்கு கலெக்டர் முருகேஷ் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினை உயர்கல்வியினை தொடர வழங்கினார்.