குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி


குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:49+05:30)

தண்ணீ்ர் வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. மழை இல்லாமல் வெயில் அடித்தது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். குற்றாலம் வந்த குறைவான சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்துச் சென்றனர்.


Next Story