ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவி


ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவி
x

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவியை எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, உளுந்தூர்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினார்.

அந்த வகையில் வடக்கனந்தல் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி, ஏழை களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், வடக்கனந்தல் நகர செயலாளர் ஜெயவேல், பேரூராட்சி மன்ற துணை தலைவர் தண்டபாணி, பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், தொழில்நுட்ப பிரிவு மற்றும் நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், அரவிந்தன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வாணியந்தல் ஆறுமுகம், கமருதீன், நகரசெயலாளர் தாகப்பிள்ளை, சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் நகர செயலாளர்கள் செல்லையா, சண்முகம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் குரு மனோ, முருகவேல், சந்திரகுமார், நகர நிர்வாகிகள் ஐஸ்வர்யாஶ்ரீ, சரவணன், குணசேகரன், வடிவேல், ராஜா, வக்கீல் சிவசங்கர், தகவல் தொழில் நுட்ப பிரிவு நீதிபதி, தினேஷ்குமார், நரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story