மனநல காப்பகத்தில் அன்னதானம்
கே.சி.வீரமணி துணைவியார் பிறந்த நாளை முன்னிட்டு மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி துணைவியார் வீ.பத்மாசினி பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட காப்பகம் மற்றும் உதவும் உள்ளங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் வரவேற்றார். அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், பத்மாசினியின் சகோதரி ஜோதி ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி டி.எம்.ரவி, நகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.எம்.எஸ்.சதீஷ், தேவகி, தினகரன், சோடாவாசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பி.கே.ராஜசேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story