உத்திர ரங்கநாதர் கோவிலில் அன்னதான திட்டம் தொடக்கம்


உத்திர ரங்கநாதர் கோவிலில் அன்னதான திட்டம் தொடக்கம்
x

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் அன்னதான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் தினமும் 100 பக்தர்கள் பயன் பெறும் வகையில் அன்னதான திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் அசோகன், கோவில் ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அருணாச்சலம், சுகுமார், தேவி, மகேந்திரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியா குமரன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், கோவில் கணக்காளர் பாபு, அரிகரன் மற்றும் கோவில் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் மதியம் 12 மணி அளவில் 100 பக்தர்கள் பயன் பெறும் வகையில் அன்னதானம் நடைபெறும், பக்தர்களின் வருகை அதிகரிப்பதை தொடர்ந்து கூடுதலாக அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story