ஓய்வூதியதாரர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க மாற்று ஏற்பாடு


ஓய்வூதியதாரர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க மாற்று ஏற்பாடு
x

ஓய்வூதியதாரர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க மாற்று ஏற்பாடு- வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் தகவல்

திருநெல்வேலி

நெல்லை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் எம்.குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியதாரர்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் மின்னணு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து வந்தனர். ஆனால் சிலருக்கு கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடிவதில்லை. ஆகவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது மின்னணு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மற்றொரு வழிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர் வாழ் சான்றிதழை மேற்கண்ட முறையில் புதுப்பிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் அவர்களுடைய முகத்தோற்றம் (முக அங்கீகாரம்) வாயிலாக தற்போது புதுப்பிக்க முடியும். அதற்கான செயலியை மத்திய அரசு "பென்ஷன் மற்றும் பென்ஷனர் நல்வாழ்வு துறை" மூலமாக அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் "AadhaarFace App". ஓய்வூதியதாரர்கள் இச்செயலியை தங்கள் ஆண்ட்ராய்டு போன் மூலமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதன் பின் Jeevan Pramaan Face Application என்ற மென் பொருளையும் பதிவிறக்கம் செய்து உரிய காலத்தில் உயிர் வாழ் சான்றிதழை புதுப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உறுப்பினர்கள் பென்ஷன் கோரும் வி்ண்ணப்பம் உள்பட அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "UAN" எண் இதுவரை உருவாக்கப்படாத உறுப்பினர்கள் அதனை உருவாக்கவும், தங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கவும் இந்த அலுவலகத்தை அணுகலாம். இந்த செயல்முறைக்கு உறுப்பினர்கள் கூட்டு உறுதிமொழி படிவத்துடன் ஆதார் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story