முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்


முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
x

முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

பனைக்குளம், ஜூன்.1-

ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அம்மாள் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் ஜெயமூர்த்தி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அமானுல்லாஹ் ஹமீது சங்கத்தின் விதிகள் குறித்து பழைய மாணவர்கள் மத்தியில் விளக்கிப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பேராசிரியர் காசிநாத துரை மற்றும் பேராசிரியர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜ மகேந்திரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நிர்வாக அலுவலர் சாகுல் அமீது மற்றும் சபியுல்லா ஆகியோருடன் இணைந்து செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story