முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
செங்கோட்டையில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் ராமசாமி வரவேற்று பேசினார். தலைவர் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுமுகம், டாக்டர் ஜவஹர், தொழிலதிபர் துரைராஜ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தலைமை ஆசிரியர் முருகேசன் பள்ளியில் நடைபெற வேண்டிய கட்டிட வசதிகள் பற்றிய கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story