ஆசிரியர்களை கவுரவித்த முன்னாள் மாணவர்கள்


ஆசிரியர்களை கவுரவித்த முன்னாள் மாணவர்கள்
x

ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்

திருச்சி

உப்பிலியபுரம், ஜூலை.28-

உப்பிலியபுரத்தை அடுத்த முருங்கப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியை கடந்த 1956-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் திறந்து வைத்தார். தற்போது அந்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பள்ளியில் 1976-77-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர். இதில் 35 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 7 ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story