முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவன பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1999-2000-ம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சொந்தமாக தொழில் புரிந்து வரும் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர்.


Next Story