முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை


மதுரை காமராஜர் சாலையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர மெட்ரிக் பள்ளியில் 2002-ம் ஆண்டு படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் விஜயராகவன் மற்றும் துணை முதல்வர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து அவர்களிடம் ஆசி பெற்றனர். இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி பொதுமக்களுக்கான ஆக்கபூர்வ பணிகளை செய்ய முடிவு எடுத்து உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கணேஷ், சக்தி தாசன், ஜீவன் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story