முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே செங்கப்படை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992-93 வருடம் 10-ம் வகுப்பு பயின்ற சுமார் 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சுமார் 30 வருடங்களுக்கு பின் தங்கள் பயின்ற அதே பள்ளியில் சந்தித்தனர். முன்னாள் மாணவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அவர்கள் தங்களது பள்ளி கால நிகழ்வுகளையும் மற்றும் ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தனர். மேலும் தாங்கள் பயின்ற பள்ளி வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் செய்யவேண்டிய பணிகள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் வீரமூர்த்தி, கணேசன் ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story