முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விருதுநகர்
விருதுநகரில் உள்ள செந்திக்குமார நாடார் கல்லூரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.காம் படித்த கல்லூரி மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர்கள் தங்களது பழைவு நினைவுகளையும் நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். மேலும் மாணவர்கள் தாங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்ததற்கு தங்களுடைய ஆசிரியர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பேராசிரியர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக பேராசிரியர் காலில் விழுந்து பேராசிரியர்களுக்கு சந்தன மாலைகளும், தங்க கிரீடமும், கேடயங்களும் வழங்கி தங்களது உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மராட்டியம், கர்நாடக மாநிலத்திலிருந்து கல்லூரி மாணவர்கள் வந்திருந்தது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story