அரசு ஆண்கள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு ஆண்கள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி இ.வே.நா.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1960-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மானவியரின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. வெளிநாட்டில் உள்ளவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து மகிழ்ந்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எஸ். கோவிந்தன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, மதியழகன், முன்னாள் எம்.பி. பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பள்ளியில் மறைந்த முதல் தலைமை ஆசிரியர் கே.ராமமூர்த்தி, படத்தினை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியினை பெற்றோர்ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர் எம்.தேவராஜ், கணினி ஆசிரியர் ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்கள். பின்னர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு, பள்ளி மேம்பாட்டிற்கு பண உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.