முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அருப்புக்கோட்டையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1978-1980-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த பள்ளி முன்னாள் மாணவர்கள் 42 பேர் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் தலைமையாசிரியர் மோகன்தாஸ் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களை கவுரவித்தனர். மேலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வோம் எனவும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், அவரது குடும்பத்தினர்கள், பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜனார்த்தனன், ராஜேந்திரன், மாரியப்பன், சுந்தரவடிவேலு ஆகியோர் செய்திருந்தனர்.