முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பாணாவரம் அரசு பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
பாணாவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 1985-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவா்கள் ஒன்றிணைந்து உடற்கல்வி ஆசிரியா் நினைவாக தாங்கள் படித்த பள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு திருவள்ளுவா் தினத்தன்று திருவள்ளுவருக்கு சிலை அமைத்தனர். தொடா்ந்து ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவா் தினத்தன்று அனைத்து முன்னாள் மாணவா்களும் சந்தித்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனை தொடா்ந்து நல்லாசிரியா் விருது பெற்ற பால்பாண்டியன் மற்றும் பதவி உயா்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இனிப்பு மற்றும் நினைவு பரிசு வழங்கியும், சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினர்.
Related Tags :
Next Story