தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு


தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
x

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 1993-1996-ம் ஆண்டுகளில் இளங்கலை வணிகவியல் படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் தோழிகளை பார்த்து மகிழ்ச்சி ததும்ப நலம் விசாரித்தனர். நிகழ்ச்சியில் மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.


Next Story