21 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
காளையார்கோவிலில் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்
காளையார்கோவில்,
காளையார்கோவில் அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 1999 முதல் 2001 வரை 100 மாணவர்கள் பயின்றனர். அவர்கள் தற்போது சிவகங்கை, தர்மபுரி, நாகப்பட்டினம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒருங்கிணைந்த அவர்கள், 21 ஆண்டுகளுக்கு பிறகு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒன்று கூடினர். ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆல்பிரட் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் மணிவண்ணன், மனோன்மணி, ஷியாமளா, சோபியா, சூசைமலர் ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அழகுமணி வரவேற்றார்.ஆசிரியர் சினேகா விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள் செல்வம், தாமஸ் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பாண்டி நன்றி கூறினார்.