ஆழ்வார்திருநகரியில் சாலைஓரத்தில் காயங்களுடன் கிடந்த மூதாட்டி
ஆழ்வார்திருநகரியில் சாலைஓரத்தில் காயங்களுடன் கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி சொக்கனூர் விநாயகர் கோவில் அருகில் சாலை ஓரத்தில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு அந்த மூதாட்டியை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனம் மோதியதில் அவர் காயமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? அவர் காயமடைந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story