அமராவதி ஆற்றில் மூழ்கி மீனவர் பலி


அமராவதி ஆற்றில் மூழ்கி மீனவர் பலி
x
திருப்பூர்


ஆற்றில் மீன் பிடிக்கும்போது, தான் விரித்த வலையிேலயே சிக்கி மீனவர் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மீனவர்

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 47). பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இவர் வழக்கம் போல மீன் பிடிப்பதற்காக கடத்தூர் அமராவதி ஆற்றில் வலையை விரித்தார்.

அப்போது ஆற்றில் அதிகமாக நீர் தேங்கி இருந்த பகுதியில் பாறை இடுக்கில் அந்த வலை சிக்கியது. அதை சரி செய்ய ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது மீன் வலைக்குள் சிக்கிக்கொண்டார். கை, கால்களை அசைத்தும் அவரால் அதில் இருந்து மீண்டு வரமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினார்.

சாவு

அந்த பகுதியில் இருந்த மக்கள் வழக்கம் போல அவர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் நீண்ட நேரமாகியும் காளிமுத்து வௌியே வராததால் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது மீன் வலைக்குள் சிக்கி சுய நினைவு இன்றி கிடந்தார்.

உடனே அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கணியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story