அமராவதி அணை நீர்மட்டம்


அமராவதி அணை நீர்மட்டம்
x

அமராவதி அணை நீர்மட்டம் விவரம் வருமாறு:-

கரூர்

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 83.60 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 2,078 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3,480 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான வரதமா நதி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணையில் இருந்து 320 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதேபோல் பாலாறு அணையில் இருந்து 943 கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. குதிரை ஆறு அணையிலிருந்து 165 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் குடகனாறு அணையிலிருந்து 612 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமராவதி ஆற்றில் 2,400 கன அடி தண்ணீர் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.


Next Story