மது அடைக்கலம் காத்த அம்பாள் கோவில் தேரோட்டம்


மது அடைக்கலம் காத்த அம்பாள் கோவில் தேரோட்டம்
x

விராச்சிலை மது அடைக்கலம் காத்த அம்பாள் கோவில் ேதரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

திருமயம்:

மது அடைக்கலம் காத்த அம்பாள் கோவில்

திருமயம் அருகே விராச்சிலையில் மது அடைக்கலம் காத்த அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

தேரோட்டம்

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மது அடைக்கலம் காத்த அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் மேள தாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மக்கள் கூட்டத்தின் நடுவே அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் குடும்பத்துடன் ஆங்காங்கே நின்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.


Next Story