அம்பாரி வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா
அரக்கோணம் அம்பாரி வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
அரக்கோணம் விவேகானந்தா கல்வி குழுமங்களில் ஒன்றான அம்பாரி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், கீதாசெந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அருணாதேவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கார்கில் போர் வீரரும், திரைப்பட நடிகருமான அசோக் பாண்டியன் மற்றும் ஆறுமுகம் குருசாமி, சின்னத்திரை நடிகர் ராயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதைத்தொடர்ந்து பள்ளியில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் சுப்பிரமணியம் பரிசு வழங்கி பாராட்டினார். மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. எல்.கே.ஜி. முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிவன் பாடல், குழந்தைகளுக்கு கேலிச்சித்திரக் கதைகள் சார்ந்த பாடல், போர் வீரர்களை போற்றும் விதமாக பாடல் பாடப்பட்டது. பொன்னியின் செல்வன் பாடலுக்கு சிறந்த முறையில் மாணவர்கள் நடனம் ஆடினர். அச்சமூட்டும் வகையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆடிய பேய் நடனம் சிறப்பாக இருந்தது. விழாவின் இறுதியில் பிரமிக்க வைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினர். ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அயூப், சுபாஷினி, ஜெனிதா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.