மதுரை விமான நிலைய சாலையில் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை விமான நிலைய சாலையில் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை பெருங்குடி விமான நிலைய சாலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. பீடத்துடன் 27¾ அடி உயரம் கொண்டதாக அந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. சிலை திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். அம்பேத்கர் சிலையை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி, எம்.பி. வெங்கடேசன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சரின் வருகையை தொடர்ந்து பெருங்குடி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானம் மூலம் சென்னை சென்றார்.
.