சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அம்பேத்கர் சிலை இடமாற்றம்
சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது.
சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அம்பேத்கர் சிலை இடமாற்றம்சேலத்தில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் தொங்கும் பூங்கா வழியாக அதிகளவில் செல்கின்றன. இதனால் தொங்கும் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் தொங்கும் பூங்கா பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலையை சுந்தர்லாட்ஜ் அருகே இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுந்தர்லாட்ஜ் அருகே அம்பேத்கர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுந்தர்லாட்ஜ் பகுதியில் சிலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் தற்போது முடிவடைந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் தொங்கும் பூங்கா அருகே இருந்த அம்பேத்கர் சிலை சுந்தர்லாட்ஜ் பகுதிக்கு இடமாற்றம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.