அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்
அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் அனைவரையும் வரவேற்றார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் படைநிலை செந்தில், மாவட்டத் துணைத் தலைவர் ராமதாஸ், கல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். முடிவில் பா.ம.க. நகர தலைவர் ரங்கநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story