தர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் கடைபிடிப்பு-சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அம்பேத்கர் நினைவு நாள்
சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு நாள் தர்மபுரியில் நேற்று பல்வேறு கட்சிகள் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோல்டன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், அன்பழகன், சம்பந்தம், சுருளிராஜன், கனகராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரன், ஜெகன், அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் தாஸ், கவுதமன், சந்திரமோகன், ரவி, குமார், ராஜா, காசிநாதன், நிர்வாகி மாதேஷ் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மோளையானூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், நெப்போலியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசு தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொருளாளர் இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் துரைப்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுந்தரம், தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் கோல்டன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிலைக்கு நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம், நகர பொருளாளர் பார்த்திபன், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர இணை செயலாளர் சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் மாதேஷ், தண்டபாணி, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் அங்கு ராஜ், முன்னாள் கவுன்சிலர் ராஜா, கூட்டுறவு சங்க இயக்குனர் மாதேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாநில அமைப்பு செயலாளர் நந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, தொகுதி செயலாளர் சமத்துவன், மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் கிள்ளிவளவன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட அமைப்பாளர் தகடூர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க.-காங்கிரஸ்
தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தர்மபுரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் வெங்கட்ராஜ், அய்ஸ்வரியம் முருகன், பட்டியல் அணி தலைவர் களிர் கண்ணன், சிறுபான்மை அணி தலைவர் செபாஸ்டியன், ஓ.பி.சி. அணி தலைவர் காவேரி வர்மன், இளைஞர் அணி தலைவர் மவுனகுருபரன், மகளிர் அணி தலைவி சங்கீதா. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நகர தலைவர் வேடியப்பன் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசங்கர், நிர்வாகிகள் நடராஜன், பரத்ராஜ், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி தங்கவேல், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சம்பத் குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், நிர்வாகிகள் ராமலிங்கம் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மொரப்பூர், மிட்டாரெட்டிஅள்ளி
மொரப்பூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி, அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தாமரைகனி, ஒன்றிய குழு உறுப்பினர் சுகா தர்மன், நிர்வாகிகள் குட்டி, ஜெயகுமார், சதானந்தம், தமிழழகன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி அருகே மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு ஊராட்சி தலைவர் தனலட்சுமி குணசேகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் ஊராட்சி செயலாளர் மாது, வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.