சிதம்பரத்தில்108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வுஇன்று நடக்கிறது


சிதம்பரத்தில்108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வுஇன்று நடக்கிறது
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு இன்று நடக்கிறது.

கடலூர்


108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், டி.ஜி.என்.எம்., ஏ.என்.எம். முடித்தவர்கள். 12-ம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் டி.எம்.எல்.டி., டி. பார்ம், பி.பார்ம் முடித்த நபர்கள், பி.எஸ்.சி. பிரிவில் தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், உயிர்தொழில்நுட்ப வியல் போன்ற போன்ற பட்டப்படிப்பு முடித்த நபர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மருத்துவ உதவியாளர் பணிக்கு 15,435 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். மேற்கண்ட தகவலை 108 அவசர ஊர்தி சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் தெரிவித்துள்ளனர்.


Next Story