கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் ஆம்பூர் மாணவர் முதலிடம்
கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் ஆம்பூர் மாணவர் முதலிடம் பிடித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் திருப்பத்தூர், கந்திலி, மாதனூர், ஜோலார்பேட்டை, ஆலங்காயம் ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். மாதனூர் ஒன்றியத்தின் சார்பில் ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் தினேஷ் குமார், காய்கறி செதுக்கு சிற்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான். இதன் மூலம் அடுத்த வாரம் மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறான்.
வெற்றி பெற்ற மாணவனை வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story