கால்பந்து போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன்


கால்பந்து போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன்
x

மேலூரில் நடந்த கால்பந்து போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மதுரை

மேலூர்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக 'ஏ' மண்டல அளவிலான கல்லூரிகளுக்கான கால்பந்துப் போட்டி மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. முதலாவது காலிறுதிப் போட்டியில் அல்ட்ரா கல்லூரியை யாதவர் கல்லூரி அணி 0-4 கோல் கணக்கில் வென்றது. 2-வது காலிறுதிப்போட்டியில் வக்போர்டு கல்லூரியை சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லூரி அணி 3-4 என்ற கோல் கணக்கில் வென்றது.

3-வது காலிறுதிப் போட்டியில் தியாகராசர் கல்லூரியை மேலூர் அரசு கலைக்கல்லூரி 1-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் லட்சுமிபதி கல்லூரியை அமெரிக்கன் கல்லூரி அணி 0-3 கோல் கணக்கில் வென்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேலூர் அரசு கல்லூரியை யாதவர் கல்லூரி அணி 0-3 கோல் கணக்கில் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லூரி, யாதவா கல்லூரி அணிகள் மோதின.போட்டியை கல்லூரி முதல்வர் மணிமேகலாதேவி தொடங்கி வைத்தார். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லூரி அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போட்டிக்கான ஏற்பாடுகளை மேலூர் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எம்.கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story