அமிர்தகடேஸ்வரர், முருகர் கோவில் கும்பாபிஷேகம்


அமிர்தகடேஸ்வரர், முருகர் கோவில் கும்பாபிஷேகம்
x

திருப்பத்தூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

கும்பாபிஷேகம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை மற்று மூலவர் பிரதிஷ்டை, முதல் கால யாகபூஜை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை, யாகவேள்வி, பூர்ணாஹூதி, நாதம், வேதம், கீதம், தீபாராதனை, பிரசாத வினியோகம் நடைபெற்றது.

யாக பூஜை

தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, யாக வேள்வி, பூர்ணாஹூதி, தம்பதி சங்கல்பம், தீபாராதனை, முக்கிய நிகழ்வாக புனித நீர் ஊற்றி கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று அமிர்தகடேஷ்வரர், அபிராமி, வள்ளி தெய்வானை, முருகர் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து தன ஆகர்சன பைரவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, பஞ்சபூத லிங்கங்கள், நவகிரகங்கள், பைரவர், ஐயப்பன், ஆதிசங்கரர், மூலஸ்தானத்தில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சாமிகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவா விஷ்ணு கோவில் கைங்கரிய டிரஸ்ட் தலைவர் பி.ஆர்.தேவராஜன், செயலாளர் எஸ்.எம்.அன்பு, பொருளாளர் நகர மன்ற உறுப்பினர் எஸ்.கோபிநாத், துணைத் தலைவர்கள் எம்.எஸ்.கோவிந்த ஆச்சாரி, கே.தேவன், எஸ்.பூபதி, துணைச் செயலாளர் ஏ.மோகனவேல், என்.ஜனார்த்தனன், இணைச்செயலாளர்கள் வி.அன்பழகன், ஏ.சந்திரன், துணைச் செயலாளர் வி.கருணாகரன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு அம்சங்கள் குறித்து அர்ச்சகர் பார்த்தசாரதி ஐயங்கார் கூறுகையில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60, 70 மற்றும் 80 வயது பூர்த்தியான தம்பதிகள் திருக்கடையூர் சென்று யாகம் வளர்த்து திருமணம் செய்ய முடியாதவர்கள் இந்த கோவிலில் யாகம் வளர்த்து திருமணம் செய்து கொள்ளலாம். அதே பலன்கள் இங்கும் கிடைக்கும் என தெரிவித்தார்.


Next Story