அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x

செய்யாறு அருகே அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு தாலுகா மாரிநல்லூர் கிராமத்தில் உள்ள அபிராமி சமேத அமிரகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக சிவாச்சாரியார்கள் யாகம், சிறப்பு பூஜை செய்து, கும்ப கலசங்களை தலையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் கோவிலை வலம் வந்து விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சிவன் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து கும்பகலச நீரை ஊற்றினர். இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் மாரியநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.

பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


Next Story