மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா
மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா
திருப்பூர்
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே உள்ள சொரியங்கிணத்துப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் நவம்பர் மாதம் 29-ந்தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பிறகு கடந்த 6-ந்தேதி கும்பம் எடுத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி காவடி கொடுமுடி புறப்பட்டு சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டது, 14-ந்தேதி காலை பொங்கல் வைத்து தீர்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்றுகாலை பூவோடு எடுத்தல்,அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சொரியங்கிணத்துப்பாளையத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story