அம்மன் தாலி திருட்டு


அம்மன் தாலி திருட்டு
x

ஆம்பூர் அருகே அம்மன் தாலியை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் இந்திரா நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதுதவிர ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். அதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்கத் தாலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஊர் நாட்டாண்மை பழனி உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story