விருத்தாசலம் அருகேஅம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விருத்தாசலம் அருகேஅம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பத்தில் அங்காளம்மன் மற்றும் வீரனார் கோவில்கள் அமைந்துள்ளன. இது அந்த பகுதியை சேர்ந்தவர்களின் குலதெய்வமாக இருக்கிறது.

நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி செயின் மற்றும் கோவிலுக்கு உள்ளே இருந்த சிறிய உண்டியலையும் பணத்துடன் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல், அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயின் ஆகியவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீஸ் வலைவீச்சு

இது குறித்து அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்கள் உருவம் அதில் பதிவாகி இருக்கிறாதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story