முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் உபயத்தில் அம்மன் திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கோத்தகிரி கடைவீதி, காம்பாய் கடை, பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம் வழியாக திருவீதி உலா சென்று ராம்சந்த் சதுக்கத்தை அடைந்தார். அங்கு இரவு 9 மணிக்கு மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மன் மீண்டும் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.