சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா


சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் உபயத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, கோத்தகிரி கடைவீதி, காம்பாய் கடை, பஸ் நிலையம் வழியாக திருவீதி உலா சென்று மீண்டும் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அம்மன் திருவீதி உலாவின் போது, சிறுவர்கள் கத்தி போட்ட படி சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.


Next Story