புஷ்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா


புஷ்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி புஷ்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 11-வது நாள் நிகழ்ச்சியாக காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகனத்தில் அம்மன் மைசூர் சக்தி சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி, கோத்தகிரி கடைவீதி, காம்பாய் கடை, பஸ் நிலையம் வழியாக திருவீதி உலா சென்று மீண்டும் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பெங்களூருவில் பிரபலமான வீரகாசி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இது அனைவரையும் கவர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு கோத்தகிரி டானிங்டனில் இருந்து பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், திருகாவடி ஊர்வலத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலம் ஏந்தி அம்மனை அழைத்து வரும் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு அம்மன் கேரள ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு கோத்தகிரி காந்தி மைதானத்தில் கண்கவர் வாணவேடிக்கை நடைபெறுகிறது.


Next Story